சாமை (Panicum sumatrense, Little Millet) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது. உணவு [ மூலத்தைத் தொகு ] இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம். மருத்துவக் குணங்கள் [ மூலத்தைத் தொகு ] எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். வேளாண்மை [ மூலத்தைத் தொகு ] ஐந்து கிலோ விதை சாமை கொண்டு பொதுவாக 1 ஏக்கருக்கு விதைக்கலாம். 80-ம் நாளில் கதிர் பிடித்து, 100 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும். சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும். விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் கரைசலில் ஆறு மண...